ஈப்போ, ஜூன் 27- பேராக் மாநிலத்தின் கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு தேசியப் பள்ளியில் விளையாட்டு நிகழ்ச்சியை பாகிஸ்தானியர் ஒருவர் தொடக்கி வைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு புகார் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக் தெரிவித்தார்.
பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற பேராக் மாநில அளவிலான மால் ஹிஜ்ரா 1447 ஹிஜ்ரா கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்டபோது அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, சிம்பாங் அம்பாட் செமாங்கோல், கம்போங் சாமா காகாவில் உள்ள சாமா காகா தேசிய பள்ளியின் தடகள விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைக்கும் கெளரவம் பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்டதை சித்தரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.


