புத்ராஜெயா, ஜூன் 26 - 2025 தேசிய மாதம் மற்றும் மலேசியா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, மக்களிடையே தேசப்பற்றை தூண்டும் நோக்கில் படைப்பாற்றல்மிக்க காணொளி போட்டி ஒன்றை மலேசிய தேசிய கழகமான (AKM) ஏற்பாடு செய்துள்ளது.
`மலேசியா மடாணி, அரவணைக்கப்படும் மக்கள்` என்ற கருப்பொருளில் Ekspresi Merdeka என்ற நிகழ்ச்சி மூலம் எதிர்வரும் ஜூன் 5 தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறவுள்ளது.
மாநில அளவில் வெற்றி பெறும் காணொளிகள் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவுபெறும் தேசிய அளவில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
"அதிகமான மலேசியர்கள் தங்களின் சுதந்திர உணர்வை ஊடகங்கள் படைப்பு மூலம் வெளிப்படுத்த ஊக்குவிப்பது இந்தப் போட்டியின் நோக்கமாகும். மேல் விவரங்களை மலேசிய தேசிய கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடகம் மூலம் பெறலாம்", என்றார் அவர்.
அதோடு, செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான நிகழ்ச்சியிலும், கலந்துரையாடலும் அதிர்ஷ்டக் குலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள், மக்களின் படைப்பாற்றலை தூண்டுவதோடு, அவர்களின் சுதந்திர பற்றை இன்னும் பொருத்தமான முறையில் வெளிப்படுத்தி கொண்டாட உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பெர்னாமா


