கோலாலாம்பூர், ஜூன் 26 - ஜூலை 1 முதல் மலேசியாவில் உள்ள வங்கிகள் சில நிதிச் சேவைகளுக்கு, 8 விழுக்காடு சேவை வரியை வசூலிக்கத் தொடங்கும்.
நிதி அமைச்சு மற்றும் அரச மலேசிய சுங்கத் துறையின் வழிகாட்டுதல்களின்படி கட்டம் கட்டமாக அவ்வரி விதிப்பு மேற்கொள்ளப்படும்.
ABM எனப்படும் மலேசிய வங்கிகள் சங்கம், மலேசிய இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சங்கம் மற்றும் மலேசிய முதலீட்டு வங்கி சங்கம் ஆகியவை ஒரு கூட்டு அறிக்கையில் அதனை அறிவித்துள்ளன.
கட்டணம் மற்றும் கமிஷன் அடிப்படையிலான நிதி சேவைகளுக்கு 8% சேவை வரி வசூலிகப்படும். ஆனால் பல முக்கிய விலக்குகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் அரசிதழில் வெளியிடப்பட்ட சேவை வரி விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த அமுலாக்கம் அமைகிறது.
இந்த சேவை வரி அமுலாக்கம் குறித்த மேல் விவரங்களுக்கு அந்தந்த வங்கி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் நாடுமாறு வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றனர்.


