அயோவா, ஜூன் 26 - தேசிய பேட்மிண்டன் வீரர் கே. லெட்ஷனா புதன்கிழமை அமெரிக்க ஓபனின் முதல் சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான நொசோமி ஒகுஹாராவை தோற்கடித்து தனது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி னார்.
உலகின் முன்னாள் நம்பர் ஒன் இடத்தில் இருந்த நொசோமி ஒகுஹாராவை உலக தர 42 இடத்திலிருக்கும் லெட்சனா தோற்கடித்த சாதனை, அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இப்பொழுது உலக தர வரிசையில் 27 வது இடத்தை வகிக்கும் ஒகுஹாராவை நேருக்கு நேர் 8-21 ,19-21 என்ற புள்ளி கணக்கில் 31 நிமிடங்களில் மிட்-அமெரிக்கா சென்டரில் லெட்சனாவிடம் தோல்வி கண்டார். லெட்சனா இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஆகாஷி காஷ்யப்பை எதிர்கொள்வார்.
தைவானின் நான்காம் நிலை வீராங்கனை சு வென்-சியை 21-17, 19-21, 22-20 என்ற செட் கணக்கில் தோற்கடித்து மலேசியாவின் மற்றொரு வீரர் வோங் லிங் சிங்கும் ஈர்க்கப் பட்டார். லிங் சிங்கின் அடுத்த எதிராளி பல்கேரியாவின் கலோயானா நல்பாண்டோவா ஆவார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், பெல்ஜியத்தின் ஜூலியன் கராகியை 21-10,21-10 என்ற செட் கணக்கில் ஜஸ்டின் ஹோ வென்றார். அடுத்த சுற்றில் அவர் தைவானின் லியாவோ ஜூவோ-ஃபூவை எதிர்கொள்வார்.


