மோரிப், ஜூன் 26 - இன்று காலை கோலா லங்காட் மாவட்ட அளவிலான மும்மொழி விழாவை கோலா லங்காட் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்றம் மற்றும் சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி ஏற்பாட்டில் நடைபெற்றது.
தேசிய வகை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளியில் இந்நிகழ்விற்கு மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தார்.
இந்த விழா ஆரம்பப் பள்ளி மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வையும், மலாய், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் மீதான அன்பை வளர்ப்பதையும் நோக்காமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் மூலம், மாணவர்கள் தங்கள் மொழித் திறன்களை வளர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல், மலேசியர்கள் என்ற வகையில் தன்னம்பிக்கையையும் வளர்க்க உதவுகிறது என பாப்பாராய்டு தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக்குவதில் உள்ள அனைத்து கல்வியாளர்கள் மற்றும் அமைப்பாளர்களின் அர்ப்பணிப்புக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.


