சிரம்பான், ஜூன் 26 - போர்ட்டிக்சனில் உள்ள ஹோட்டல் ஒன்றின் எட்டாவது மாடியிலிருந்து விழுந்ததாக நம்பப்படும் பெண்மணி ஒருவர் உயிரிழந்ததார்.
இருபத்தாறு வயதுடைய அப்பெண் சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் குறித்து தமது துறைக்கு நேற்று மாலை 6.35 மணிக்கு தகவல் கிடைத்ததாக போர்ட்டிக்சன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைமை தீயணைப்பு அதிகாரி முகமது கமால் முகமது திமார் கூறினார்.
அப்பெண் எட்டாவது மாடியிலிருந்து ஹோட்டலின் முதல் மாடி பால்கனியில் விழுந்ததாக நம்பப்படுகிறது. மீட்புக் குழு ஸ்ட்ரெச்சர் கூடைகளைப் பயன்படுத்தி மீட்புப் பணிகளை மேற்கொண்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதை சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார்.
இந்த வழக்கு மேல் விசாரணைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
என்று முகமது கமால் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் மஸ்லான் உடின், இதன் தொடர்பில் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.


