கோலாலம்பூர், ஜூன் 26: கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் 10A மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்று மெட்ரிகுலேஷன் கல்விக்கு விண்ணப்பித்த அனைத்து சிறந்த மாணவர்களுக்கும் இனம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் இடம் வழங்கப்படும்.
நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விஷயம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக மலேசிய கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றின் மூலம்
அறிவித்துள்ளது.
“இதில் A- பாட முடிவுகளைக் கொண்ட மாணவர்களும் அடங்குவர். இந்தக் கொள்கை கடந்த ஆண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததைப் போன்று அமையும்
“2024 எஸ்.பி.எம் தேர்வில் 10A பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தங்கள் படிப்பைத் தொடர வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கான தற்போதைய பூமிபுத்ரா ஒதுக்கீட்டு முறை தொடரும் மற்றும் இந்த நடவடிக்கையால் அது பாதிக்கப்படாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
“நாட்டின் எதிர்கால சொத்துக்களாக இருக்கும் அனைத்து மாணவர்களின் நலனுக்காக கல்விக்கான அணுகலின் மேம்பாட்டை மடாணி அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— பெர்னாமா


