ரமல்லா, ஜூன் 26 - இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை அமல் செய்வதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வெற்றிகரமான முயற்சிகளுக்கு பாலஸ்தீன அதிபர் மாமுட் அப்பாஸ் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
உலகைச் சூழ்ந்துள்ள நெருக்கடிகளைத் தணிக்க இந்த முயற்சி அவசியமான மற்றும் முக்கியமான படியாக விளங்குவதோடு பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அப்பாஸ் கூறியதாகப்
பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா கூறியது.
காஸா பகுதியில் உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தத்தை அடைய வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்திய டிரம்பின் துணிச்சலான நிலைப்பாடுகளை அதிபருக்கு எழுதிய கடிதத்தில் அவர் நினைவு கூர்ந்தார்.
பாலஸ்தீனர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் முழு உலகிற்கும் இடையே ஒரு நியாயமான மற்றும் விரிவான அமைதியை அடைவதற்கான தனது முக்கியமான முயற்சிகளில் இது ஒரு கூடுதல் படியாகும்.
நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் விருப்பமும் தலைமையும் இருந்தால் அமைதியை அடையவும் நீதியை வெல்லவும் முடியும் என்ற நம்பிக்கையை பிராந்திய மக்களுக்கு அளிக்கிறது என்று அப்பாஸ் கூறினார்.
அதிபர் டிரம்ப் மற்றும் தொடர்புடைய அரபு மற்றும் அனைத்துலகத் தரப்பினருடன் அணுக்கமாகப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்து அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை தரக்கூடிய விரிவான அமைதி ஒப்பந்தத்தை அடைய உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இதன் தொடர்பிலு அதிபர் டிரம்ப், சவுதி அரேபியா, அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய மற்றும் அனைத்துலகப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்ற பாலஸ்தீன அரசு தயாராக இருப்பதாக அப்பாஸ் உறுதிப்படுத்தினார்.


