பெலா, ஜூன் 25 - நேற்று அதிகாலை கொலம்பியா, பெலா எனும் நகரில் நிலச்சரிவில் ஏற்பட்டது. அதில் குறைந்தது 10 பேர் பலியான நிலையில் 15 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
மேலும், 15 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடி மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்நடவடிக்கையில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது, பள்ளிகள் மற்றும் சமூக மண்டபங்கள் தற்காலிக நிவாரண மையங்களாக செயல்பட்டு வருகின்றன.
-- பெர்னாமா


