போர்டிக்சன், ஜூன் 25 - நேற்று போர்டிக்சன் அருகே, ஜாலான் லுக்குட் - சிப்பாங் சாலையில் இரட்டை கோட்டில் முந்திச் செல்ல முயன்ற காரோட்டி, எதிரே வந்த டிரேய்லர் லாரியுடன் மோதி உயிரிழந்தார்.
3 வாகனங்களை உட்படுத்திய இவ்விபத்து பிற்பகல் 3.30 மணி அளவில் நிகழ்துள்ளது.
புரோட்டன் வீரா கார் ஒன்று திடீரென முன்னே வருவதை கண்ட டிரேய்லர் ஓட்டுநர் முடிந்தவரை மோதுவதைத் தவிர்க்க முயன்றுள்ளார், இருந்தபோதிலும் விபத்தைத் தவிர்க்க முடியவில்லை.
இதனால் 51 வயதுடைய அக்காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இச்சம்பவத்தில் டிரேய்லர் லாரி கவிழ்ந்து, அது ஏற்றிச் சென்ற எரிவாயு தோம்புகள் சாலையில் சிதறி விழுந்தன.
மேலும், இந்த விபத்தில் புரோட்டன் சாகா கார் ஒன்றும் பாதிக்கப்பட்டது. ஆனால், அதன் ஓட்டுநருக்கு காயாம் ஏதும் ஏற்படவில்லை.
44 வயதான டிரேய்லர் ஓட்டுநர் தலையிலும் கைமுட்டியிலும் சிறியக் காயங்களுக்கு ஆளானார் என போர்டிக்சன் காவல்துறை கூறியது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் 3 மணி நேரங்களுக்கும் மேல் போக்குவரத்து நிலைக்குத்தியது.


