நியூயார்க், ஜூன் 25 - இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளார்.
இரு நாடுகளும் போர்நிறுத்தத்தை முழுமையாக மதித்து சண்டையை நிறுத்த வேண்டும் என்று குட்டெரெஸ் வலியுறுத்தியதாக ஐ.நா. பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
இப்போரினால் இரு தரப்பு மக்களும் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் குட்டெரெஸ் வலியுறுத்தினார் என்று அவரது பேச்சாளரான ஸ்டீபன் டுஜாரிக் கூறினார்.
இப்பிராந்தியத்தில் நிகழும் பிற மோதல்களை நிறுத்துவதற்கு இந்தப் போர்நிறுத்தம் ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்படலாம் என்று பொதுச் செயலாளர் நம்புகிறார் என்று அவர் தெரிவித்தார்.


