SELANGOR

ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்சனைக்கு கழிவு நீர் வெளியேற்றம் காரணமா? இண்டா வாட்டர் மறுப்பு

25 ஜூன் 2025, 1:34 PM
ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்சனைக்கு கழிவு நீர் வெளியேற்றம் காரணமா? இண்டா வாட்டர் மறுப்பு

ஷா ஆலம், ஜூன் 25 - இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளம் ஏற்படுவதற்கு கழிவுநீர்  வெளியேற்ற செயல்பாட்டில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணம் எனக் கூறப்படுவதை இண்டா வாட்டர் குழுமம் மறுத்துள்ளது.

வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் விரிவான தொழில்நுட்பத் திட்டமிடல்படி கட்டப்பட்ட அந்த  கழிவுநீர் குழாய் அமைப்பு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

கழிவு நீர் சேகரிப்பு குளத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியேற்றும் பாதை கட்டுமானம் தொடங்கப்பட்டது முதல் இருந்து வரும்  அசல் பாதையாகும்.  அதன் செயல்பாட்டில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்று அந்நிறுவனம் ஓர் அறிக்கையில் கூறியது.

வடிகால்கள் மற்றும் கால்வாய்களில் நீர் நிரம்பி வழியும் பிரச்சனைக்கு முக்கிய காரணம் , முறையான பராமரிப்பு இல்லாததுதான் என்பதை இண்டா வாட்டர் செயல்பாட்டுக் குழு கண்டறிந்தது.

வடிகால்களும் அதனுடன் தொடர்புடைய கால்வாய்களும்  குப்பைகள், மணல் படிமங்கள் மற்றும் மர வேர்களால் சூழப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது,

இந்த சூழ்நிலை காரணமாக அருகிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து  சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரும் குடியிருப்புப் பகுதியிலிருந்து மழை நீரும் சீராக வெளியேற முடியாமல்  போய்விட்டது

என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

தாமான் ஸ்ரீ மூடாவின் தாழ்வான நிலப்பகுதியும் அது கிள்ளான் ஆற்றுக்கு அருகில் இருப்பதும் அப்பகுதியில் மீண்டும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக் காரணமாகிறது என அது மேலும் கூறியது.

தாமான் ஸ்ரீ மூடாவில் இரு இடங்களில் அமைந்திருக்கும் கழிவுநீர் வழித்தடங்கள் இங்கு அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு  காரணமாக இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் நேற்று கூறியிருந்தார்.

தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் கழிவுநீர் நீரை பொருத்தமான இடத்திற்கு திருப்பிவிடும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு

இண்டா வாட்டர் குழுமத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

நீர் வடிகால் அமைப்பை மிகவும் பொருத்தமான இடத்திற்குத் திருப்பிவிடுமாறு நாங்கள் இண்டா வாட்டர் நிறுவனத்திடம்  கேட்டுக்கொள்கிறோம். மழை பெய்தாலும்  பெய்யாவிட்டாலும்  இண்டா வாட்டர் கழிவு நீரோட்டம் வேகமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.