பெய்ஜிங், ஜூன் 24 - சீனா பெய்ஜிங்கில் நடைபெற்ற 2025 உலகக் கிண்ண ஆடவருக்கான 72 கிலோ கிராம் பிரிவில் தேசிய எடைத் தூக்கும் பாரா வீரர் போனி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
CASPD எனும் மாற்றுத்திறனாளி விளையாட்டளர்களுக்கு நடைபெற்ற இப்போட்டியில் சரவாக்கைச் சேர்ந்த போன்னி 215 கிலோகிராம் எடையை தூக்கி சாதனை படைத்தார்.
இதன் மூலம், அனைத்துலக அரங்கில், நாட்டின் எடைத் தூக்கும் பாரா வீரர் போனி பன்யாவ் கஸ்டினின் நற்பெயர் தொடர்ந்து அசைக்க முடியாத இடத்தில் உள்ளது.
இபோட்டியில் கியூபா நாட்டைச் சேர்ந்த வீரர் 175 கிலோகிராம் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியாவின் வீரர் ராமுபாய் பி. பாம்பாவா 151 கிலோகிராம் எடைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
பெர்னாமா


