(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூன் 24 - பண்டார் உத்தாமாவில் அமைந்துள்ள எஃபிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிடத்தின் பணி நிறைவுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினரும் சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜமாலியா ஜமாலுடின், பிரதமரின் சிறப்புப் பணி அதிகாரி சண்முகம் மூக்கன், பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் திரு. கே. தனபாலன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இந்த புதிய கட்டிடம் மாணவர்கள் கல்வி கற்பதற்கு உகந்த வசதியான சூழலைக் கொண்டுள்ளதாக பாப்பாராய்டு தனது முகநூல் பதிவில் கூறினார்.
இந்த எஃபிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1960 ஆம் ஆண்டு தொடங்கி நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இப்பள்ளி தொடக்கத்தில் பத்து 8, லாடாங் எஃபிங்காம் பகுதியில் நிறுவப்பட்டது.
சமூகப் போராட்டத்தின் விளைவாக இந்தப் பள்ளி இறுதியாக பண்டார் உத்தாமாவில் மூன்று ஏக்கர் நிலத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றது.
இப்பள்ளிக் கட்டிடம் கடந்த 1992ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இன்று நமது இன்று மாணவர்களின் எதிர்காலத்திற்காக சிறந்த நவீன வசதிகளுடன் இந்த மரபு தொடர்கிறது என்று அவர் சொன்னார்.


