கோலாலம்பூர், ஜூன் 24: தேசிய அளவில் 2024 எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகளின் ஒட்டுமொத்த தரப் புள்ளி சராசரி (CGPA) 2.85 ஆக பதிவாகியுள்ளது. இது எஸ்.டி.பி.எம் தேர்வு செயல்படுத்தப்பட்டதிலிருந்து மிக உயர்ந்ததாகும்.
இந்த நிலை முந்தைய ஆண்டு பதிவு செய்யப்பட்ட 2.84 இலிருந்து 0.01 புள்ளி அதிகரித்துள்ளது என மலேசிய தேர்வுகள் கவுன்சில் (MPM) தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் அமின் முகமட் டாஃப் கூறினார்.
கூடுதலாக, 1,266 மாணவர்கள் அல்லது 3.06 சதவீதம் பேர் 4.00 CGPAயைப் பெற்றுள்ளனர். இது 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 150 மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிதுள்ளது என்றார்.
"2024 ஆம் ஆண்டில், ஐந்து பாடங்களிலும் 5A பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரிதுள்ளது. இந்த எண்ணிக்கை 2023இல் 41ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது``, என்று அவர் இன்று 2024 எஸ்.டி.பி.எம் முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
2023ஆம் ஆண்டில் 1,087 மாணவர்களுடன் ஒப்பிடும்போது 4A பெற்றவர்களின் எண்ணிக்கை தற்போது 1,228ஆக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.


