அலோர் ஸ்டார்: நேற்றிரவு கெடாவின் சில பகுதிகளில் வீசிய திடீர் புயலைத் தொடர்ந்து, பல மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக சிக் மாவட்டத்தில் குறைந்தது ஆறு மரங்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என பாதுகாப்புப் படை (APM) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் குருன் மற்றும் அலோர் ஸ்டார் பகுதிக்கு இடையே ஒரு மரம் விழுந்ததாகப் பதிவாகியுள்ளது. நெடுஞ்சாலையின் இரு பாதைகளையும் மரம் மறித்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இவ்வாரம் முழுவதும் அங்கு அதிக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட் மலேசியா) கணித்துள்ளது என APM மேலும் தெரிவித்தது.
குறிப்பாக கெடாவின் உட்புறப் பகுதிகளில் புயல்கள் பிற்பகல் நேரங்களில் ஏற்படும் என்றும் இந்நிலை சனிக்கிழமை வரை நீடிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


