கோலாலம்பூர், ஜூன் 23 - நேற்று காலை கூச்சிங் அனைத்துகலக விமான நிலையத்தில் அரச மலேசிய விமானப் படையின் CN-235 நடுத்தர போக்குவரத்து விமானம் ஓடுபாதையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியதால், விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த சம்பவம் காலை 11.30 மணிக்கு நடந்ததாகவும், இதில் அரச மலேசிய விமானப் படையின் ஒரு விமானம் சம்பந்தப்பட்டதை விமான நிலைய கட்டுப்பாட்டாளரான மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் உறுதிப்படுத்தியது.
விமானத்தை பாதுகாப்பாக அகற்றுவதற்கும் அதைத் தொடர்ந்து சுத்தம் செய்வதற்கும் வசதியாக ஓடுபாதை மூடப்பட்டது.


