கோலாலம்பூர், ஜூன் 24 - பதிமூன்றாவது மலேசிய திட்ட (ஆர்.எம்.கே.13) அமலாக்கத்தின் வெற்றி, திட்டங்களின் சீரமைப்பு, ஒவ்வொரு அமைச்சு மற்றும் அரசு நிறுவனங்களின் தயார் நிலையைப் பொறுத்ததே என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கொள்கைகளை உணர்ந்து எதிர்காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஒவ்வொரு நிர்வாக இயந்திரமும் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரே மனநிலையுடனும் சீரான தன்மையுடனும் குழுவாக செயல்பட வேண்டும் என்று நிதியமைச்சருமான அன்வார் வலியுறுத்தினார்.
13வது மலேசியத் திட்டம் என்பது பல மாதங்களுக்கு முன்பு அமைச்சுகள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நடைபெற்ற தொடர்ச்சியான விவாதங்களின் விளைவாகும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு நடைபெற்ற 13வது மலேசியத் திட்டத்தின் கட்டமைப்பு மற்றும் முக்கிய முன்னெடுப்புகளை ஆய்வு செய்வதற்கான அமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை அவர தாங்கினார்.
நாட்டின் ஐந்தாண்டுகால வளர்ச்சி இலக்குகளை வகுக்கும் மைல்கல்
இந்த ஆவணமாகும். இது அடுத்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என பிரதமர் தனது முகநூல் பதிவில் கூறினார்.
இந்த கூட்டத்தில், 13வது மலேசியத் திட்டத்தை செம்மைப்படுத்தும் முயற்சியில் அனைத்து அமைச்சர்களும் அமைச்சின் உயர் நிர்வாகமும் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கு அன்வார் வாய்ப்பு வழங்கினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மடாணி அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக 13வது மலேசியத் திட்டம் அமைந்துள்ளது.


