கோலாலம்பூர், ஜூன் 23 - எதிர்வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல், விசிட் மலேசியா 2026ஐ முன்னிட்டு கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின், விமான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்று மலேசியா சுற்றுலா சங்கத் தலைவர் உசைடி உடானிஸ் கருத்துரைத்துள்ளார்.
KLIA விமான நிலையத்தில் தரையிறங்கும் சுற்றுலாப் பயணிகள் எளிமையாக தலைநகரின் மையப் பகுதிக்கு பயணிப்பதற்கு இந்த நவீன விமான ரயில் சேவை துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலையான அட்டவணைகளுடன் கூடிய விமான ரயில் சேவை, தெளிவான பலகைகள் மற்றும் நிகழ்நேர டிஜிட்டல் புதுப்பிப்புகளுடன் புது பொலிவுடன் பயணிகளை வரவேற்கும் என்றார் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில் பொதுமக்களின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கின் உறுதிப்பாட்டையும் முயற்ச்சியையும் உசைடி பாராட்டியுள்ளார்.


