பிராய்யா கிராண்டே, ஜூன் 23 - பிரேசிலின் சாண்டா கெத்தரினா சுற்றுலா பகுதியில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்திருந்த வெப்ப காற்று பலூன் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் எண்மர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
சாண்டா கெத்தரினா, பிராய்யா கிராண்டேவில் சுற்றுலா பயணிகள் பலூன் வழியாக வானில் பறக்கும் நிகழ்வு மிகவும் பிரபலம்.
கடந்த சனிக்கிழமை இந்நாட்டு நேரப்படி காலை மணி எட்டு அளவில் 21 பேர் கொண்ட குழு வானில் பலூனில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த பலூன் தீப்பிடித்து வெடித்தாக அதிகாரிகள் கூறினர்.
அவரச நிலையில் பலூனை தரையிறக்க முயற்சிக்கப்பட்ட நிலையில், 13 பேர் பாதுகாப்பாக அதிலிருந்து குதித்துள்ளனர்.
எனினும், பலூனில் இருந்த எடை குறைந்ததால் அது மீண்டும் மேலே பறக்க தொடங்கி எண்மரை காப்பாற்ற முடியாமல் போனது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
--பெர்னாமா


