மத்திய செபராங் பிறாய் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏ. சி. பி ஹெல்மி ஆரிஸ், தனது குழு இரவு 10.42 மணிக்கு பொதுமக்களிடமிருந்து பெற்ற தகவல்களை தொடர்ந்து, கட்டிடத்தின் வளாகத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் குழு ஒன்றுக் கூடிவருவதாக அவர்களுக்கு புகார் கிடைத்தாக தெரிவித்தார்.
"புக்கிட் மிஞ்சாக்'' தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தால், ஒரு கட்டிடம் தொழிலாளர் விடுதியாக மாற்றப்பட்டதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது, மேலும் அவ்வளாகத்தில் வசிக்கும் போது தொழிலாளர்கள் புகைபிடிப்பதையோ அல்லது மது அருந்துவதையோ தடை செய்யும் விதிகளை அமைத்துள்ளது".
"நிறுவனத்திற்கு தெரியாமல் விதிமுறைகளை மீறிய தொழிலாளர்களிடமிருந்து அபராதம் வசூலித்ததற்காக, வெளி நாட்டவரான விடுதி வார்டன் மீது பல தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்ததால் இந்த சம்பவம் ஏற்பட்டது" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் கட்டிடத்திற்கு முன்னால் கூடி, அங்கு இருந்த நிறுவனத்தின் வேனை சேதப்படுத்தினர் என்று ஹெல்மி கூறினார்.
ஆயுதங்கள் அல்லது ஆபத்தான பொருட்களுடன் கலவரம் செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் 148 வது பிரிவின் கீழ் விசாரணைக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் செவ்வாய்க்கிழமை வரை காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.
முன்னதாக, இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியது, ஆனால் நிலைமையை அமைதிப்படுத்த போலீசார் அந்த இடத்துக்கு விரைந்தனர்.


