பினாங்கு, ஜான் சாகுன் பிரான்சிஸ், புக்கிட் மெர்தாஜாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) பணியாளர்கள் குழு மதியம் 1:16 மணிக்கு வாட்ஸ்அப் வழியாக பாதிக்கப்பட்டோரின் இருப்பிடம் குறித்து தகவல் கிடைக்கப் பட்டதாக கூறினார்.
"பொது மக்களின் உதவியுடன், பாதிக்கப் பட்டவரைத் தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஐந்து உறுப்பினர்கள் ஈடுபட்டனர்".
"18 வயதுடைய இருவரும் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக கீழே கொண்டு வரப்பட்டனர்". இந்த நடவடிக்கை மாலை 4:14 மணிக்கு முடிவடைந்தது "என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில் , தாமான் ஸ்ரீ ஆச்சே நிபோங் திபாலில் மற்றொரு சம்பவத்தில், ஆறு வயது சிறுவன் கால் இரும்பு படிக்கட்டுகளில் சிக்கி தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டது.
"தீயணைப்புத் துறை ஒரு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப் பட்டவரின் காலை வெற்றிகரமாக வெளியேற்றியது". பின்னர் பாதிக்கப்பட்டவர் பராமரிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டார், மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் "என்று அவர் கூறினார்.


