கோலாலம்பூர், ஜூன் 21 — தஞ்சோங் மாலிம்-கே.எல். சென்ட்ரல்-தஞ்சோங் மாலிம் பயணிகள் ரயில் மற்றும் மின்சார ரயில் (இ.டி. எஸ்.) தடத்தில் நேற்று மின் விநியோகம் தடைபட்டது.
இந்த மின்சாரத் தடை காரணமாக ரயில்கள் ஒற்றைத் தடத்தை மட்டுமே பயன்படுத்துவதால் இந்த வழித்தடத்தில் கே.டி.எம். பயணிகள் மற்றும் இ டி.எஸ். சேவைகள் அசல் அட்டவணையிலிருந்து 60 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகிவிட்டதாக கெராதாப்பி தானா மெலாயு பெர்ஹாட் (கே.டி.எம்.பி.) தெரிவித்தது.
இதனால் உண்டான அனைத்து சிரமங்களுக்கும் கே.டி.எம்.பி. மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. ரயில் சேவைகள் குறித்த சமீபத்திய தகவல்கள் அவ்வப்போது வழங்கப்படும் என்று அது முகநூல் பதிவில் கூறியது.


