சிங்கப்பூர், ஜூன் 20 - 2025 ஆசியக் கிண்ண குழு, அம்பு எய்தல் போட்டியின் இறுதி களத்தில் இந்தியாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தது மலேசியா. இதன் மூலம் தேசிய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாற்றையும் உருவாக்கியது.
இறுதிச் சுற்றில், சிறந்த போட்டித் தன்மையை வெளிப்படுத்திய தேசிய அணி நான்கு சுற்றுகளுக்குப் பிறகு 232-232 என்ற புள்ளிகளில் சமன் கண்டது. பின், வெற்றியைத் தீர்மானிக்கும் ஷூட் ஆஃப் (Shoot-Off) களத்தில் வாகை சூடியது.
ஃபத்தின் நூர்ஃபத்தெஹா மாட் சாலே, சரித்தா சாம் நொங் எங் சுய் கிம் தலைமையிலான மலேசியா அணி 29 புள்ளிகள் பெற்று மலேசியாவின் தங்கப் பதக்க வெற்றியை உறுதி செய்தது.
இதில் 26 புள்ளிகளில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
தேசிய அணிக்கான இந்த வெற்றி, இவ்வாண்டு இறுதியில் தாய்லாந்தில் நடைபெறும் 2025 சீ விளையாட்டுப் போட்டி உட்பட பெரிய சவால்களை எதிர்கொள்வதில் புதிய உத்வேகத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
--பெர்னாமா


