நியூயோர்க், ஜூன் 20 - ஆயுத மோதலில் சிறார்களுக்கு எதிரான வன்முறை கடந்த 2023-ஆம் ஆண்டைக் காட்டிலும், 2024-ஆம் ஆண்டில் 25 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதுவரை பதிவாகாத அளவிற்கு கடந்தாண்டு ஆயுத மோதலினால் பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை, பதிவாகியுள்ளதாக சிறுவர்களும் ஆயுத நெருக்கடிகளும் எனும் தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, 5,149 சட்ட மீறல்கள் முன்னதாகவே நிகழ்ந்திருந்தாலும் அவை கடந்தாண்டே உறுதிபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சட்ட மீறல்களால் கடந்தாண்டு முழுவதும் 22,495 சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 50 விழுக்காட்டு வன்முறைகள் அரசு சாரா ஆயுதக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
--பெர்னாமா


