ஷா ஆலம், ஜூன் 20 - வெள்ளம் காரணமாக நீர்தேங்கியதால் ஷா ஆலம் விரைவுச் சாலையில் (கெசாஸ்) உள்ள கெமுனிங் டோல் சாவடியின் மூன்று தடங்கள் இன்று காலை தற்காலிகமாக மூடப்பட்டன.
தற்காலிகமாக மூடப்பட்ட மூன்று தடங்களில் W01, W02 மற்றும் W03 ஆகியவையும் அடங்கும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (எல்.எல்.எம்.) முகநூல் மூலம் அறிவித்தது.
வெள்ளச் சம்பவம் காலை 8.19 மணிக்கு ஏற்பட்டதாகவும் இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மெதுவாக இருந்ததாகவும் அந்த வாரியம் கூறியது.
வெள்ளத்தை கருத்தில் கொண்டு மக்கள் தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அது குறிப்பிட்டது.


