புத்ராஜெயா, ஜூன் 20 - இவ்வாண்டு மலேசியா தனது முதல் கோவிட்-19 மரணத்தைப் பதிவுச் செய்துள்ளது.
இதில் மரணமடைந்தவர், நீரிழிவு, இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் என்பதோடு இரண்டாவது ஊக்கத் தடுப்பூசி போடாதவர் ஆவார்.
இது, கடந்தாண்டு மே 26-ஆம் தேதிக்குப் பிறகு நாட்டில் பதிவான முதல் கோவிட்-19 உயிரிழப்பும் ஆகும்.
கடந்தாண்டு முழுவதும் 57 பேர் கோவிட்டால் மரணமடைந்த நிலையில், இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இவ்வாண்டு இதுவரையில் 21,738 கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


