புக்கிட் ஜாலில், ஜூன் 19 - அனைத்துலக ஹாக்கி போட்டியில் மலேசியா 2-1 எனும் நிலையில் ஜப்பானை வீழ்த்தியது.
ஜப்பானைத் தோற்கடித்த போதிலும், கோல் வித்தியாசத்தில் பின்னடைவில் இருப்பதால் தேசிய அணியான ஸ்பீடி டைகர்ஸ் (Speedy Tigers) அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது.
இந்த பருவத்தில் முதல் நான்கு இடங்களுக்கு முன்னேற வேண்டும் என்று தேசிய அணியின் இலக்கு நிறைவேறாமல் போனது. B குழுவில் உள்ள பாகிஸ்தானும் நியூசிலாந்தும் அடுத்து சுற்றுக்கு முன்னேறின.
பாகிஸ்தானுடன் நான்கு புள்ளிகளைப் பகிர்ந்து கொள்ளும் மலேசியா இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்திற்கான வாய்ப்பை நழுவ விட்டது.
புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி அரங்கில் நடந்த ஆட்டத்தின் போது கடைசி நிமிடங்கள் வரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் மலேசிய அணியால் அதிக கோல்கள் அடிக்க முடியவில்லை.
பயிற்றுநர் சர்ஜித் சிங் தலைமையிலான மலேசியா 8 மற்றும் 26-வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்தது.
நாளை நடிபெறவிருக்கும் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தால் மலேசியா 5-வது மற்றும் 6-வது இடத்தை உறுதி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
பெர்னாமா


