புத்ராஜெயா, ஜூன் 19 — டெலிகிராம் தளத்தில் உள்ள இரண்டு சேனல்களான ‘எடிசி சியாட்’ மற்றும் ‘எடிசி காஸ்’ மீது சிவில் வழக்கை மலேசிய தொலைத் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் தொடர்ந்துள்ளது.
இரண்டு சேனல்களும் 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் கீழ் விதிகளை மீறும் உள்ளடக்கத்தைப் பரப்புவதாக அடையாளம் காணப்பட்ட்டுள்ளன. இது பொது நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை சிதைத்து பொது ஒழுங்கைப் பாதிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
“MCMC பல்வேறு பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், டெலிகிராம் குறிப்பிட்ட உள்ளடக்கத்தை நீக்க தவறியதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,”.
தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பரப்புவதைத் தடுக்கவும், அத்தகைய உள்ளடக்கத்தை மீண்டும் வெளியிடுவதைத் முடக்கவும் கடைசி முயற்சியாக உயர் நீதிமன்றத்திடமிருந்து இடைக்காலத் தடை உத்தரவை வெற்றிகரமாகப் பெற்றதாக MCMC தெரிவித்துள்ளது.
சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுவதையும், பொது நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“அனைத்து சமூக ஊடக வழங்குநர்களும் தத்தம் தளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கத்திற்கு பொறுப்பாவார்கள் என்பதை நினைவூட்ட விரும்புவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
— பெர்னாமா


