NATIONAL

உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் மலாயாப் பல்கலைக்கழகத்திற்கு 58ஆவது இடம்

19 ஜூன் 2025, 2:42 PM
உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் மலாயாப் பல்கலைக்கழகத்திற்கு 58ஆவது இடம்

கோலாலம்பூர், ஜூன் 19 - உலகளவில் இரண்டு இடங்கள் முன்னேறி 58வது இடத்தைப் பிடித்த பிறகு, குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் Quacquarelli Symonds (QS) உலக பல்கலைக்கழக தரவரிசையில் மலாயா பல்கலைக்கழகம் நாட்டின் சிறந்த பல்கலைக்கழகமாகத் தொடர்கிறது.

QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2026 பட்டியலில், ஆசியாவில் மலாயா பல்கலைக்கழகம் 16வது இடத்தைப் பிடித்தது. ஒன்பது குறியீடுகளில் முன்னணி இடங்களில் சிறந்த நிர்வாகத்தில் 40ஆவது இடத்தையும், கல்விக்கான நற்பெயரில் 58 ஆவது இடத்தையும் மலாயா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

மலாயா பல்கலைக்கழகத்திற்கு அடுத்து UKM எனப்படும் மலேசிய தேசிய பல்கலைக்கழகம் இருந்தது. இப்பல்கலைக்கழகம் இடத்திலிருந்து 12 இடங்கள் முன்னேறி 126ஆவது இடத்தைப் பெற்றது.

மலேசியா புத்ரா பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் 14 மற்றும் 12 இடங்கள் முன்னேறி 134ஆவது இடத்தைப் பெற்றதன் மூலம் அவ்விரு பல்கலைக்கழகங்களும் மலேசியாவில் மூன்றாவது இடத்தைப் பெற்றன.

மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 28 இடங்கள் முன்னேறி 153வது இடத்தைப் பிடித்து. முதல் 200 இடங்களில் உள்ள மற்றொரு மலேசிய பல்கலைக்கழகமாக அது திகழ்கிறது.

சன்வே பல்கலைக்கழகம் மற்றும் UUM எனப்படும் வட மலேசிய பல்கலைக்கழகமும் முறையே 410வது மற்றும் 491வது இடத்தைப் பிடித்த பிறகு முதல் 500 இடங்களுக்குள் முன்னேறின

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.