செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க், ஜூன் 19 - ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜூன் 22ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் இரு தரப்பினருக்கும் இடையிலான உறவுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதன்கிழமை தெரிவித்ததாக ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் தலைமை பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி அதே நாளில் தனது உக்ரேன் பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என புடின் கூறினார்.
நாங்கள் இன்னும் தொடர்பில் இருக்கிறோம். இரு தரப்பிலிருந்தும் பேச்சுவார்த்தை குழுக்கள் இன்னும் தொடர்பு கொள்கின்றன. நான் இதுகுறித்து மெடின்ஸ்கியிடம் இப்போதுதான் கேட்டேன் . அவர் இன்று உக்ரேனிலிருந்து ஒரு பிரதிநிதியுடன் பேசியதாகக் கூறினார் என அவர் தெரிவித்தார்.
ஜூன் 22க்குப் பிறகு ஒரு சந்திப்பை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் அடிப்படையில் விவாதித்து வருகின்றனர் என்று அவர் மேலும் சொன்னார்.


