தோக்கியோ, ஜூன் 19 - கிழக்கு ஹொக்கைடோவில் உள்ள நெமுரோ தீபகற்பத்தின் கடல் பகுதியில் இன்று ரிக்டர் அளவில் 6.1 எனப்பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து ஆழமற்ற பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 8.08 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த மையம் கூறியது.
இந்த நிலநடுக்கம் ஹொக்கைடோவின் கிழக்கு பசிபிக் கடற்கரையில் கடல் நீர் மட்டத்தில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்று அம்மையம் குறிப்பிட்டது. ஆனால், சேத ஆபத்து குறித்த விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


