வாஷிங்டன், ஜூன் 19 - அமெரிக்காவில், டிக்டாக் செயலிக்கு கூடுதலாக மூன்று மாதக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிராம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, டிக்டாக் செயலியைத் தடை செய்ய முன்னதாக முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சீனா நாட்டை சேராத விற்பனையாளரைத் தேடுவதற்கும், முறையான கலந்தாலோசனையை நடத்தவும், இந்த கால அவகாச நீட்டிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும், அந்நாட்டில் டிக்டாக் செயலி செயல்பட வேண்டும் என்றால், அது சீனாவைச் சேராத ஒரு நிறுவனம் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
பெர்னாமா


