ANTARABANGSA

தாய்லாந்தில் அரசியல் குழப்பம் - நாட்டின் இறையாண்மையைக் காக்க பியூ தாய் கட்சி உறுதி

19 ஜூன் 2025, 11:37 AM
தாய்லாந்தில் அரசியல் குழப்பம் - நாட்டின் இறையாண்மையைக் காக்க பியூ தாய் கட்சி உறுதி

பேங்காக், ஜூன் 19 - ஆளும் கட்சி கூட்டணிக்குள் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில் கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சனையை அமைதியான வழியில் தீர்க்கும் அரசாங்கத்தின் அணுகுமுறைக்கு தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தலைமையிலான பியூ தாய் கட்சி தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டின் இறையாண்மையையும் தாய் மக்களின் நலன்களையும் பாதுகாப்பதே தலையாயப் பணியாக உள்ளது என்று பியூ தாய் கட்சி நேற்றிரவு  வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

தற்காப்புத் துறை, இராணுவம் மற்றும் வெளியுறவு அமைச்சை  உள்ளடக்கிய அரசாங்கத்தின் அணுகுமுறையை கட்சி ஆதரிக்கிறது. பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அமைதியான வழிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை அது  வலியுறுத்துகிறது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் தாய் நாட்டின்  நலனுக்காக தாய்லாந்து மக்கள் வெளிப்படுத்தும் ஒற்றுமையை விட வேறு எந்த சக்தியும் பெரியதல்ல என்று அது கூறியது.

தாய்லாந்தின் இறையாண்மையைப் பாதிக்கும் அரசாங்க நடவடிக்கைகள் மீதான அதிருப்தியைக் காரணம் காட்டி ஆளும் கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியான பூம்ஜைதாய் அரசாங்கத்திலிருந்து விலக முடிவு செய்ததைத் தொடர்ந்து பியூ தாய் கட்சி இந்த அறிக்கையை வெளியிடப்பட்டது.

தனது எட்டு அமைச்சர்களும் ஜூன் 19 முதல் ராஜினாமா செய்வதாக பூம்ஜைதாய் கட்சி நேற்று ஓர் அறிக்கையில் அறிவித்தது.

கடந்த ஜூன் 15 ஆம் தேதி  கம்போடியாவின் செனட் தலைவர் ஹுன் சென்னுடனான  தொலைபேசி உரையாடல் கசிந்ததைத் தொடர்ந்து பிரதமர் பேடோங்டார்ன் "தீங்கு விளைவிக்கும் நடத்தை" கொண்டவர் என்று அக்கட்சி குற்றம் சாட்டியது.

பூம்ஜைதாய் விலகியதைத் தொடர்ந்து தாய்லாந்தில் 500 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பியூ தாய் தலைமையிலான கூட்டணி இன்னும் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. கூட்டணியில் 142 இடங்களுடன் பியூ தாய் மிகப்பெரிய கட்சியாக உள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.