கோத்தா பாரு, ஜூன் 19 - இங்குள்ள பாசிர் பூத்தே, கம்போங் துவாலாங் திங்கி அருகே ஆடவர் ஒருவரின் உடல் ஆற்றில் மிதப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த உடல் கணடுபிடிக்கபபட்டது தொடர்பில் செலிங் காவல் நிலையத்திற்கு நேற்று மாலை 3.30 மணியளவில் தகவல் கிடைத்தாக பாசீர் பூத்தே மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜைசுல் ரிசால் ஜக்காரியா கூறினார்.
இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த செலிங் காவல் நிலையம் மற்றும் பாசீர் பூத்தே மாவட்ட காவல் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஆற்றில் ஆடவர் உடல் மிதப்பதைக் கண்டதாக அவர் சொன்னார்.
சுற்று வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் சோதனையில் சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படவில்லை என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த ஆடவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காகப் பாசீர் பூத்தே, தெங்கு அனிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறிய அவர், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.


