மலாக்கா, ஜூன் 18 — கடந்த ஆண்டு வழிபாட்டுத் தலம் ஒன்றிற்கு சொந்தமான RM50,000இல் மோசடி செய்யப்பட்டது. அதன் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, அக்கோயில் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் எதிர்வரும் திங்கள்கிழமை (ஜூன் 23) வரை ஆறு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
MACC சட்டம் 2009 இன் பிரிவு 23இன் கீழ் 61 மற்றும் 75 வயதுடைய இருவருக்கு எதிராக மலாக்கா மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தாக்கல் செய்த தடுப்பு காவல் விண்ணப்பத்திற்கு மாஜிஸ்திரேட் உத்மான் அப்துல் கானி அனுமதித்தார்.
செயல்குழு கூட்டத்தில் எந்தவொரு ஒப்புதல் அல்லது விளக்கக்காட்சியும் இல்லாமல் சங்க நிதியை பயன்படுத்தியதால், அதிகாரத்தையும் பதவியையும் துஷ்பிரயோகம் செய்ததன் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் நேற்று காலை 11.45 மணிக்கு மலாக்கா MACC அலுவலகத்தில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பிட்ட பணம் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.


