புது டெல்லி, ஜூன் 18 - இந்தியா அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787 ரக விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டியை புலனாய்வாளர்கள் மீட்டுள்ளனர்.
அந்த விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளும் மீட்கப்பட்டுள்ள நிலையில், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கூடிய விரைவில் அறிவிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த கருப்புப் பெட்டிகள் மூலம் விமானி அறை உரையாடல்கள், இயந்திரம் மற்றும் விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் தொடர்பான தரவுகள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை புலனாய்வாளர்கள் பெறமுடியும்.
இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் போயிங் நிறுவ அதிகாரிகளின் உதவியுடன் இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் நிபுணர்கள், இந்த விபத்தை விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஜூன் 12-ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், வானில் பறக்கத் துவங்கிய சிறிது நேரத்திலேயே விழுந்து வெடித்துச் சிதறியது. அதில் பயணித்த 241 பேர் பலியாகினர்.
பெர்னாமா


