ஷா ஆலம், ஜூன் 18: இலவச டியூசன் (PTRS) கற்றல் தொகுதிகளை மின் வணிக தளமான ஷோப்பியில் விற்பனை செய்யும் தனிநபர்களின் செயல்களை எம்பிஐ கண்டித்துள்ளது.
இத்திட்டத்தின் தொகுதிகளை விற்பனை செய்யும் விளம்பரங்களை தனது தரப்பு கடுமையாக கருதுவதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எம்பிஐயின் தலைவர் அஹ்மட் அஸ்ரி ஜைனல் நோர் வலியுறுத்தினார்.
"இது ஒரு பொறுப்பற்ற செயலாகும். ஏனெனில், மாநில அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச கற்றல் பொருட்கள் தனிநபரால் இலாபம் ஈட்டும் பொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"இக்குற்றத்தை புரிந்தவர்கள் மீது ஷோப்பி தகுந்த நடவடிக்கை எடுக்கும் என தாம் நம்புவாதாக மீடியாசிலாங்கூர் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
ஜூன் 14 அன்று இலவச டியூசன் (PTRS) கற்றல் தொகுதிகளின் விளம்பரம் மற்றும் விற்பனை தொடர்பாக எம்பிஐ, ஷோப்பி மலேசியாவை தொடர்பு கொண்டு புகார் அளித்ததாகவும், அதன் பதிலுக்காக இன்னும் காத்திருப்பதாகவும் அஹ்மட் அஸ்ரி மேலும் கூறினார்.


