நூசா தெங்காரா, ஜூன் 18 - இந்தோனேசியாவின் கிழக்கு நூசா தெங்காரவில் உள்ள Lewotobi Laki-Laki எரிமலை மீண்டும் வெடித்துச் சிதறியுள்ளது.
வானில் சுமார் 11 கிலோ மீட்டர் உயரத்திற்கு அது புகையையும் சாம்பலையும் கக்கியுள்ளது. இதை வைரலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் காண முடிகிறது.
இதை தொடர்ந்து, எரிமலையின் வெடிப்பு எச்சரிக்கை அபாய கட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, கனமழை பெய்தால் எரிமலை குழம்பு பாய்ந்தோடக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த Lewotobi எரிமலை இதற்கு முன் கடந்த மே மற்றும் மார்ச் மாதங்களில் வெடித்தது குறிப்பிடத்தக்கது. அச்சமயம் ஏராளமான விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டது.
இந்த Lewotobi எரிமலை இந்தோனேசியாவில் இன்னமும் தீவிரமாக உள்ள எரிமலைகளில் ஒன்றாகும்.


