ANTARABANGSA

ஈரானில் உள்ள மலேசியர்கள் அனைவரும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

18 ஜூன் 2025, 11:47 AM
ஈரானில் உள்ள மலேசியர்கள் அனைவரும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

புத்ராஜெயா, ஜூன் 18: ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு அதிகரித்து வரும் பதட்டமான நிலைமையைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள அனைத்து மலேசியர்களும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஈரானில் நிலைமை நிலையற்றதாகவே உள்ளது மற்றும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மோசமடையும் அபாயம் இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

"நிலைமை மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள அனைத்து மலேசியர்களும் கிடைக்கக்கூடிய எந்த வழியையும் பயன்படுத்தி கொண்டு உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தெஹ்ரானில் உள்ள மலேசிய தூதரகத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், தாமதமின்றி நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதை அது உறுதிப்படுத்தியுள்ளது.

"அவர்களின் பயணச் செயல்முறையை எளிதாக்குவதற்குத் தேவையான உதவியை தூதரகம் தொடர்ந்து வழங்கும். மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் எப்போதும் அமைச்சகத்தின் முன்னுரிமையாகும்" என்று அது கூறியது.

ஏதேனும் அவசரநிலைகளுக்கு, ஈரானில் உள்ள மலேசியர்கள் தெஹ்ரானில் உள்ள மலேசிய தூதரகத்தை பின்வரும் முகவரிகளில் `No. 25, 2nd Alley, North Zarafshan St., Shahrak-e-Gharb` நாடலாம். மேலும், தொலைபேசி எண்கள்: +98 21 8807 2444, +98 21 8807 8606, +98 933 535 2602, மின்னஞ்சல் முகவரி mwtehran@kln.gov.my அல்லது mwconsular.teh@gmail.com மூலம் தொடர்பு கொள்ளலாம்.

ஜூன் 17 முதல் செயல்பாட்டு அறையையும் அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஈரானில் உள்ள மலேசியர்களின் குடும்ப உறுப்பினர்கள் மேல் தகவல்களுக்கு +603 8887 4570 என்ற எண்ணில் அமைச்சகத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது dutyofficer@kln.gov.my என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.