கோலாலம்பூர், ஜூன் 17 - 2025-ஆம் ஆண்டுக்கான உலகப் போட்டித்தன்மை வரிசையில் மலேசியா 11 இடங்கள் முன்னேறி 23ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சான MITI தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு மலேசியா அப்பட்டியலில் 34-ஆவது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தரவரிசையானது 2020 ஆண்டுக்கு பின் எட்டப்பட்ட நாட்டின் சிறந்த அடைவுநிலையாகும். இது மலேசியாவின் பொருளாதார மீட்சி மற்றும் சீர்திருத்தத்தின் முற்போக்கான வேகத்தை பிரதிபலிப்பதாக MITI தெரிவித்தது.
இந்த பொருளாதார அடைவுநிலை, அரசாங்க மற்றும் வணிகத் திறன்கள் நாட்டின் ஒட்டுமொத்த போட்டித்தன்மையை உந்தச் செய்துள்ளன.


