NATIONAL

சுகாதாரப் பராமரிப்பு செலவினத்தைக் கையாள செயல்குழு உருவாக்கம்-  பிரதமர் தகவல்

17 ஜூன் 2025, 4:32 PM
சுகாதாரப் பராமரிப்பு செலவினத்தைக் கையாள செயல்குழு உருவாக்கம்-  பிரதமர் தகவல்

கோலாலம்பூர், ஜூன் 17- மக்களின் வாழ்வைப் பாதிக்கும் முக்கிய சவால்களில் ஒன்றாக விளங்கி வரும் சுகாதாரப் பராமரிப்புச் செலவின அதிகரிப்பைக் கையாள அமைச்சுகளுடன் இணைந்து செயல் குழு அமைக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

நிதி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் பேங்க் நெகாரா மலேசியா  ஆகியவற்றை உள்ளடக்கிய அக்குழு தரமான சுகாதாரப் பராமரிப்பு மலிவான கட்டணத்தில் அனைத்து மலேசியர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒன்றிணைந்து செயல்படும் என்று அவர் கூறினார்.

மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருவதால் தனியார் சுகாதாரப் பராமரிப்பைப் பெறுவது பெரும்பாலான மலேசியர்களுக்கு கடினமாகி வருகிறது. இது வெறும் பொருளாதாரக் கவலை மட்டுமல்ல. இது நாட்டின் நலனையும் சார்ந்துள்ளது என்று அவர் சொன்னார்.

இன்று இங்கு நடைபெற்ற சாசனா 2025 ஆய்வரங்கிரங்கில் ஆற்றிய  முக்கிய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் மதிப்பு அடிப்படையிலான தனியார் சுகாதாரப் பராமரிப்பு முறையை நோக்கி ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த நாடு தயாராக இருக்க வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.

தெளிவான கட்டண நிர்ணயம், வலுவான டிஜிட்டல் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் உலகளாவிய மருத்துவ காப்புறுதி  போன்ற தனியுரிம விருப்பங்கள் மூலம் விரிவாக்கப்பட்ட அணுகல் ஆகியவை முக்கிய மாற்றங்களில்  அடங்கும்.

நாட்டின் சீர்திருத்தத்தின்  தூணாக சுகாதாரப் பாதுகாப்பை மாற்றுவதே எங்கள் குறிக்கோள் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம். நாங்கள் சிறிய மாற்றங்கள் அல்லது சிறிய பிரதிரூப  மாற்றங்களைப் பற்றிப் பேசவில்லை என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தை சீர்திருத்துவதற்கான முயற்சிகள் மேலோட்டமாக மட்டுமல்ல பரிவு , உறுதியான அடித்தளம் மற்றும் மக்களின் தேவைகளால் வழிநடத்தப்படும் கட்டமைப்பாகும்.  இந்த சீர்திருத்தம் செயல்படுத்தப்படுவதை நான் நேரில் பார்ப்பேன் என்று அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.