கேமரன்மலை, ஜூன் 17 - கேமரன்மலையில் கியா ஃபார்ம் எனும் காய்கறிகள் விற்பனை செய்யும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பயணிகள் கூட்டத்தை மோதியது.
இச்சம்பவம் நண்பகல் மணி 12 அளவில் நிகழ்ந்துள்ளது. இதில் மூன்று சிறார்கள் உட்பட நான்கு சுற்றுப் பயணிகள் காயமடைந்தனர்.
இவ்விபத்து தொடர்பான காணொளி பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது. அதில் சிவப்பு நிற கார் ஒன்று சாலையோரத்தில் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்த சுற்றுப்பயணிகளை வேகமாக வந்து மோதும் காட்சி இடம்பெற்றிருந்தது.
இதனிடையே, விபத்தில் காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பின்னர், வீட்டிற்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
பெர்னாமா


