புது டெல்லி, ஜூன் 17 - புது டெல்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறால் ஹோங் கோங்கிற்கே திரும்பியது.
நேற்று நண்பகல் 12.20 மணிக்கு ஹோங் கோங்கிலிருந்து A1315 விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள், தலைமை விமானி தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக சந்தேகப்பட்டார்.
இதனால் பாதுகாப்புக் கருதி, பயணத்தைத் தொடருவதில்லை என முடிவெடுத்த விமானி, கட்டுப்பாட்டு கோபுரத்திடம் அத்தகவலைத் தெரிவித்தார்.
பின், 1.15 மணியளவில் விமானம் பாதுகாப்பாக ஹோங் கோங்கில் தரையிறங்கியது. பின்னர், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
ஒரு மிகுந்த முன்னெச்சரிக்கையாகவே அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்தது.


