ஜாலான் பினாங், ஜூன் 17 - ரோன் 95 பெட்ரோல் உதவித் தொகை சீரமைப்பு நடவடிக்கை மக்களைப் பாதிக்காது என்பதை அரசாங்கம் உறுதி செய்யும்.
பெட்ரோல் உதவித் தொகை சீரமைப்பினால், மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற எதிர்க்கட்சியின் கூற்று, ஓர் அரசியல் தந்திரம் ஆகும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.
"எனவே, நமது பொருளாதாரத்தை முன்னேற்ற உதவும் நேர்மறையான ஊக்கமளிக்கும் செய்திகள் தேவைப்படும்போது, அதிக எதிர்மறையான செய்திகள் வெளிவருகின்றன", என்றார் அவர்.
"நமது மக்களில் 85% முதல் 95% வரை பெரும்பான்மையானவர்களுக்கு பெட்ரோல் விலையை உயர்த்துவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. மானியத்தை சீரமைப்பு செய்வது நமது நாட்டிற்கு மிகவும் முக்கியமானது.
குறைந்த வருமானம் கொண்ட குழுவினருக்குப் பயனளிக்கும் வகையில் போதுமான நாட்டின் வளங்கள் திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவே, உதவித் தொகையைச் சீரமைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டதாகப் பிரதமர் விளக்கினார்.
பெர்னாமா


