புத்ரா ஜெயா, ஜூன் 17 - கடந்தாண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய 150,557 மாணவர்களுக்கு அரசாங்க உயர்க் கல்விக் கழகங்களில் கல்வியை தொடரும் வாய்ப்பை பெற்றனர். இணையம் வழி பெறப்பட்ட 223,624 யூ.பி.யூ விண்ணப்பங்களில் 67.33 விழுக்காட்டினர் அரசாங்க உயர்க்கல்விக் கழகங்களில் பயிலும் வாப்பை பெற்றனர்.
மொத்தம் 86,589 பேர் அரசாங்க பொது பல்கலைக்கழகங்களிலும், 42,058 பேர் பாலிடெக்னிக் தொழிற்நுட்ப பல்கல்லூரிகளிலும், 20,427 பேர் சமூகக் கல்லூரிகளிலும் மற்றும் MARA உயர்கல்வி பிரிவின் கீழ் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கு 1,483 பேருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
எந்தவொரு வாய்ப்பும் பெறாத மாணவர்கள், நேற்று தொடங்கி ஜூன் 25 வரை 10 நாட்களுக்குள், UPUOnline வழியாக மேல்முறையீட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.


