கடந்த மே 23ஆம் தேதி நடைபெற்ற 2025-2028 தவணைக்கான கெஅடிலான் கட்சியின் உயர் மட்டப் பதவிகளுக்கான தேர்தலில் நூருல் இஸ்ஸா அன்வார் மொத்தம் 9,803 வாக்குகளைப் பெற்று ரபிஸியைத் தோற்கடித்து கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கெஅடிலான் தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் கட்சியை வலுப்படுத்துவதில் தொடர்ந்து பங்களிப்பேன் என்று ரபிஸி முன்பு கூறியிருந்தார். அதே வேளையில் அமைச்சரவையை அவசரமாக மாற்றியமைக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என்றும் அமைச்சர் தனது முடிவை மறுபரிசீலனை செய்வார் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்பார்த்திருந்தார்
இந்த நிலையில் இன்று எரிசக்தி ஆசியா 2025 மாநாட்டில் பேசிய அன்வார், பொருளாதார அமைச்சகம் அப்படியே இருக்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.
"ரஃபிசிக்கு நான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்-அவர் தனது பாத்திரத்தில் விதிவிலக்காக சிறப்பாக பணியாற்றினார்" என்று அவர் கூறினார்.
இந்த பொறுப்புகளை எந்த அமைச்சர் அல்லது அமைச்சகம் ஏற்கும் என்பதை உரிய நேரத்தில் நான் தீர்மானிப்பேன் "என்று அவர் கூறி , ரபிஸி பதவி குறித்து நிலவி வந்த ஆருடங்களுக்கு பிரதமர் முற்றுப்புள்ளி வைத்தார்.


