கோலாலம்பூர், ஜூன் 15- தலைநகர் வட்டாரத்திலுள்ள ஆறு பொழுதுபோக்கு வளாகங்களில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட ஓப் நோடா சோதனை நடவடிக்கையில் 24 முதல் 43 வயதுடைய மூன்று வங்காளதேசிகள் உள்பட எட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சுமார் எட்டு ஆண்டுகளாக மலேசியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாக நம்பப்படும் அந்த மூவரிடமும் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லை என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது இசா கூறினார்.
பொழுதை இனிமையாக கழிப்பதற்கு அம்மூவரும் இந்த பொழுதுபோக்கு மையத்திற்கு வாடிக்கையாளர்களாக வருவது இது மூன்றாவது முறையாகும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அதிகாலை 2.00 மணி முதல் 3.00 மணி வரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒரு உள்ளூர் ஆடவர், இரண்டு இந்திய ஆடவர்கள், ஒரு பாகிஸ்தானியர் மற்றும் ஒரு இந்தோனேசிய பெண் அடங்குவர் என்று ருஸ்டி கூறினார்.


