வாஷிங்டன், ஜூன் 15- அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் கடந்த சனிக்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிய நிலையில் அவர்களின் பெரும்பாலான உரையாடல்கள் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் பதட்டம் குறித்து கவனம் செலுத்தியதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க அதிபர் புடின் இன்று காலை என்னை அழைத்தார். மிக முக்கியமாக அவர் ஈரான் பற்றி விவாதிக்க விரும்பினார். அது அவருக்கு நன்றாகத் தெரியும் என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறினார். போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் நான் தெளிவுபடுத்தினேன் என்று டிரம்ப் ரஷ்யா-உக்ரைன் மோதலைக் குறிப்பிட்டு கூறினார்.
எங்கள் உரையாடல் மத்திய கிழக்குப் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தியிருந்தாலும் உக்ரைன் போர் குறித்து நானும் புதினும் அடுத்த வாரம் விவாதங்களைத் தொடருவோம் என்று டிரம்ப் தெரிவித்தார்.
அவர் இப்போது திட்டமிட்டபடி கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொண்டு வருகிறார். இரு தரப்பிலிருந்தும் ஏராளமான கைதிகள் பரிமாற்றம் செய்யப்படாடுள்ளனர் என்று டிரம்ப் கூறினார்.


