பேங்காக், ஜூன் 15 - ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787-8 விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டி விமான விபத்து நடந்த இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக என்.டி.டி.வி.யை மேற்கோள் காட்டி ஸ்புட்னிக்/ஆர்ஐஏ நோவோஸ்டி செய்தி வெளியிட்டுள்ளது.
மெத்தம் 274 உயிர்களைப் பலிகொண்ட விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய புலனாய்வாளர்களுக்கு அந்த கருவியில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் உதவும் என்று கூறப்படுகிறது.கடந்த வெள்ளிக்கிழமை விபத்து நடந்த இடத்தில் முதலாவது கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது.
மேற்கு இந்திய நகரமான அகமதாபாத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் பயணிகள் விமானம் சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
விபத்து நிழ்ந்தபோது இரண்டு விமானிகள் மற்றும் 10 விமானப் பணிப்பெண்கள் உட்பட 242 பேர் விமானத்தில் இருந்ததை இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
மருத்துவ மாணவர்களுக்கான விடுதியின் கூரை மீது விமானம் மோதியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. இந்த துயர சம்பவத்தில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டதாக ஏர் இந்தியா பின்னர் உறுதிப்படுத்தியது.
விமானம் விபத்துக்குளாளான இடத்திலிருந்த 33 பேரும் இதில் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளானபோது விடுதியில் அல்லது அதற்கு அருகில் இருந்த 10 மருத்துவ மாணவர்களும் அவர்களில் அடங்குவர்


